விநாயகர் காப்பு திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம் உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னோடை வச்சிர மருப்பி னொற்றை மணிகொள்கிம் புரிவ யங்க மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். சுப்பிரமணியர் காப்பு மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேண் மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்